அண்மையச்செய்திகள்

Sunday 12 November 2017

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா -- மாமன்னர் ஒண்டிவீரனார் மணிமண்டபம்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
மாமன்னர் ஒண்டிவீரனார் மணிமண்டபம்
*********
நெல்லையில் மாமன்னர் ஒண்டிவீரனார் மணிமண்டபம் அருகே உள்ள திடலில் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ஒண்டிவீரனார் மணிமன்டபம் பல்வேறு போராட்டங்களை கடந்து குதிரையுடன் கூடிய சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் 64 செண்ட்ல் உள்ள ஆபத்தான கல்வெட்டான் குழி மூடப்படாமல் இருப்பது பூங்கா கழிப்பிடவசதி போன்ற அடிப்படை வசதி என எதுவும் செய்யாமல் முழுமைப்படுத்தபடாமல் தற்போதும் உள்ளது
நெல்லை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களின் முயற்சியால் 82,00,000 மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பினார் திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்து நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் திரு.தனபால் அவர்கள் அறிக்கை அளித்தார்
இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாவட்டம் முழுவதும் பல கோடியில் நலத்திட்டம் அறிவிப்பார்கள் நூற்றாண்டு விழா நடைபெறும் திடலின் அருகில் உள்ள ஒண்டிவீரனார் மணிமண்டபம் பணியை முழுமைப்படுத்த 82,00,000 மதிப்பிலான திட்ட மதிப்பீடும் நாளை நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்படும் என்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் எதிர்பார்க்கிறோம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதே திடலில் கடந்த மேயர் தேர்தலில் பிரச்சாரத்திற்கு வரும் போது
மணிமண்டபத்தை முழுமைப்படுத்தாத அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒண்டிவீரனார் மணிமண்டபத்தில் கருப்பு கொடி கட்டி ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் அதன்பின் மணிமண்டப பணிகள் விரைவுபடுத்தப்பட்டது
அதேபோல தற்போதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தோழர்கள் கூறிய போது தோழர்களின் வேண்டுகோளை ஏற்று அதைப்பற்றி மாவட்ட நிர்வாகிகள் பரிசீலனை செய்து நூற்றாண்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்
ஏனெனில் இது தொடர்பாக இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம்
ஒருவேளை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முயற்சியால் திட்ட மதிப்பீட்டில் உள்ள நிதியை நூற்றாண்டு விழாவில் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது
அறிவிக்காமல் புறக்கணித்தால் அதன்பிறகு நடக்கும் போராட்டங்கள் நிச்சயம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்
மாமன்னர் ஒண்டிவீரனார் மணிமண்டப பணியை முழுமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் தயாரிக்கப்பட்ட 82,00,000 மதிப்பீலான திட்ட மதிப்பீட்டின் நிதியை நூற்றாண்டு விழாவில் அறிவிப்பார்கள் என்று
எதிர்பார்க்கிறோம்...
முதல் சுதந்திர போராட்டத்தை வித்திட்ட ஒண்டிவீரனார் அவர்களின் தியாகத்தை அதிமுக அரசு அங்கிகரிக்கிறதா அல்லது புறக்கணிக்கிறதா என்று நாளை நடைபெறும் நூற்றாண்டு விழாவில் தெரிந்துவிடும்
கு.கி.கலைகண்ணன்
மாவட்ட செயலாளர்
நெல்லை கிழக்கு மாவட்டம்
ஆதித்தமிழர் பேரவை


No comments:

Post a Comment