அண்மையச்செய்திகள்

Tuesday, 21 November 2017

மதுரையில் அருந்ததியர் இளைஞர் மீது சாதிவெறி தாக்குதல் - களத்தில் ஆதித்தமிழர் பேரவை

இந்து-தமிழன்-தலித் அருந்ததியர் (சாமி கும்பிடும்) *பா.நாகராஜ் (22)*மீது,
இந்து -தமிழன்-நாடார் சமூகத்தைச் சேர்ந்த (சாமி கும்பிடும்) *நா.விஜயன்(21)* என்பவர் கொலைவெறித் தாக்குதல்.!
""""""'""""""""""""""""""'"""""""""""""""""
விசாரணையில்....
மதுரை மாநகர் இரயில்வே காலனியில் வசிக்கும் *அருந்ததியர்* சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (SRLY-Staff) மகன் நாகராஜ் (22)(Cattering Graduate) என்பவர்,
மதுரை முடக்குச்சாலை பகுதியில் வசிக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன்-மகேஸ்வரியின் மகள் பிரியங்கா (21)(Bsc Hotel Managment) என்பவரும்,
கடந்த 3 வருடங்களாக சாதி மறுத்து காதலித்தும் அடிக்கடி சந்தித்தும் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாஸ்டர் மகால் தேனி சாலை பகுதியில் நேற்று 20-11-2017 மாலை 4 மணியளவில் நாகராஜ் பிரியங்காவை சந்தித்க நடந்து சென்று
கொண்டிருக்கும் போது,முடக்கு சாலை
நாடார் சமூகத்தைச் சார்ந்த நாகராஜன் என்பரின் மகன் விஜயன்(21) (பிரியங்காவின் தாய்மாமன் மகன்) என்பவர் பைக் பம்பர் மறைவில் வைத்திருந்த பெரிய Steel ராடை எடுத்து நாகராஜ் தலையில் மீது பலமாக தாக்கினார் இதில் நிலைகுலைந்த நாகராஜை மீண்டும் கொலைவெறியுடன் சராமாரியாக தாக்கியுள்ளார் விஜயன்.
உடனே அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் விஜயன் தப்பியோடிவிட்டார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாகராஜனிடம் தொலைபேசி எண்ணை வாங்கி அவரது தந்தை பாலகிருஷ்ணணுக்கு போன் செய்து உங்களுடைய மகன் மயக்க நிலையில் உள்ளார் என்று கூறியுள்ளனர்.
இதை அறிந்த பாலகிருஷ்ணன். YGS மோகன் அவர்கள் மூலம் மதுரை பேரவை மாநகர பொறுப்பாளர்களான சாமிக்கண்ணு.செல்ப்பாண்டி.ரமேஷ். மாரிச்சாமி ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு உடனே சென்று பாதிக்கப்பட்ட நாகராஜை மீட்டு கரிமேடு காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்று காவல்துறையினரிடம் *சண்டை போட்டு* Hospital Memo வாங்கி தோழர் கபீர்நகர் கார்த்திக்.தோழர் முத்துராமன் ஆகியோரின் கூடுதல் ஒத்துழைப்போடு மதுரை அரசு தலைமை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 99 வது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் 21-11-2017 இன்று ஆயுதத்தால் திட்டமிட்டு சாதியத்திமிரோடு கொலைவெறி தாக்குதல் நடத்திய விஜயன் மீது மதுரை கரிமேடு காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களுடன் களத்தில் மாநகர மாவட்டச் செயலாளர் சாமிக்கண்ணு.மாவட்டத் தலைவர் செல்லப்பாண்டி.மாவட்ட நிதிச் செயலாளர் ரமேஷ்.
மாநில இளைஞரணி செயலாளர் இரா.செல்வம்.
ஆகியோர்கள்.
----------------------------------------
பெரு.தலித்ராஜா.
தூய்மைத் தொழிலாளர் பேரவை.
*ஆதித்தமிழர் பேரவை*

No comments:

Post a comment