அண்மையச்செய்திகள்

Sunday, 19 November 2017

கோவையில்.. தமிழக தன்னாட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

கோவையில்..
தமிழக தன்னாட்சி
கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

கோவையில்..
தமிழக தன்னாட்சி
கலந்தாய்வுக் கூட்டம்,
""""""""'"""""""""""""""""""""
நவம்பர் 19,
ஞாயிறு இன்று காலை 11.மணியளவில் தன்னாட்சி தமிழகம் என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம். கோவை பாப்பநாயக்கன் பாளையைம் சிக்மா டவர் இரண்டாம் தளத்தில் நடைபெற்றது.

40 பேர் கலந்து கொண்டனர், கலந்து கொண்டவர்கள் அனைவரும் பெரியாரிய, தமிழ் தேசிய, தமிழ் உணர்வாளர்கள் மட்டும்தான், இதில் கலந்து கொண்ட ஒரே தலித் இயக்கம் ஆதித்தமிழர் பேரவை மட்டுமே!

கண.குறிஞ்சி வரவேற்பில், தன்னாட்சி தமிழகம் செல்வி காலந்தாய்வின் நோக்கம் குறித்து பேசினார்.
ஆழி. செந்தில்நாதன், முன்னுரையுடன்.. கு.இராமகிருட்டிணன், புரட்சிகர இளைஞர் முன்னணி, மே.17 உள்ளிட்ட இயக்கங்களின் கருத்துக்களுடன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் வழிகாட்டுதலின் பேரில் நான் (பொதுச்செயலாளர் ஆ.நாகராசன்) பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்தேன்.

நண்பகல் 2.30 மணிவரை நடைபெற்ற கலந்தாய்வில் பேரவை சார்பில் பேசப்பட்ட கருத்துக்களை ஒட்டுமொத்த கூட்டமும் ஏற்கப்பட்டு, கூட்டத்தின் நோக்கம் சரியான திசை நோக்கி பயணித்து, இறுதியில்.. எடுக்கப்பட்டு முடிவுகளும் கூட பேரவை கருத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது.

கண.குறிஞ்சி உரையிலிருந்து, மரபுக்காக நடத்தப்பட்ட கூட்டமாக இல்லை இது! உண்மையான உணர்வோடே இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதாவே தோன்றுகிறது.

மொத்தத்தில் இன்று நல்ல கூட்டம், ஆரோக்கியமான கருத்து விவாதம். மகிழ்ச்சி.

கூடுதலாக பேரவை ஊடகச் செயலாளர் வீரவேந்தனும் கலந்து கொண்டார்.
____________________
பொதுச்செயலாளர்




No comments:

Post a comment