அண்மையச்செய்திகள்

Sunday, 19 November 2017

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா இந்திராகாந்தி நூற்றாண்டு நிறைவு விழா - அய்யா அதியமான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா இந்திராகாந்தி நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் 18/11/2017 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.


அய்யாவின் உரையின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான், திமுக செயல்தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் மற்றும் CPI த.பாண்டியன் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் அதியமான் சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் கூறியதாவது

தமிழ்நாட்டில் இன்று ஒரு அவலமான சூழ்நிலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு பன்வாரிலால் என்ற புரோகிதரை அனுப்பி வைத்திருக்கிறார். அவர் இங்கே வந்து அலுவலகங்களை ஆய்வு செய்வதும்,பேருந்து நிலையங்களிலே உள்ள குப்பைகளை அகற்றுவது போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதுமாக, ஏற்கனவே புதுச்சேரியிலே தொடங்கி வைத்திருக்கிற துணை நிலை ஆளுநர் கிரன்பேடி செய்து கொண்டிருப்பதை போல் தமிழ் நாட்டிலும் இன்று தொடங்கி செய்து கொண்டிருக்கிறார். எவ்வளவு ஒரு அவலமான ஆட்சி இது. பேரூந்து நிலையத்திலே குப்பைகளை தூய்மை படுத்துகிற மரியாதைக்குரிய ஆளுநர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் , நீங்கள் வெறுமனே குப்பைகளை மட்டும் தூய்மை படுத்தாதீர்கள் நீங்கள் சுத்தம் செய்த பேரூந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே பொதுக்கழிப்பிடம் இருக்கிறது அதையும் சேர்த்து நீங்கள் சுத்தப்படுத்துங்கள் நாங்கள் நம்புகிறோம் நீங்கள் சொல்வது உண்மையான தூய்மை இந்தியாவை தான் என்று.

நீங்கள் இப்போது சொல்லிக்கொண்டிருப்பது என்ன தூய்மை இந்தியா? தூய்மை பணியாளர்களெல்லாம் செத்துக்கொண்டிருக்கிறார்கள்,அவர்களை கவனிப்பதற்கு நாதியில்லை. இன்றைக்கு நடப்பதை ஒட்டுமொத்தமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போல "ஆட்டுக்கு தாடியும் தேவையில்லை, நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை " என அன்றே தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கிற பொழுது நமக்கு அண்ணை இந்திரா காந்தி அவர்களின் நினைவு இன்றைக்கு வருகிறது.ஒரு இரும்பு மங்கையாக இருந்து இந்திய நாட்டின் வரலாற்றை மாற்றி அமைக்கின்ற மிகப்பெரிய சாதனைகளை அவர்கள் அன்று செய்தார்கள்.அந்த சாதனை என்பது சாதாரனமானது அல்ல,ஏறத்தாழ நான்கு முறை இந்திய தலைமை அமைச்சராக வந்திருந்த போதிலும் கூட அவர்கள் ஆட்சி காலத்திலே ஒரு நிரந்தரமான ஆட்சியை மக்களுக்கு கொடுத்தார்கள்.அந்த நிரந்தரமான ஆட்சியின் முலம் தான் அவர்கள் அன்றைக்கு இருபது அம்சம் திட்டம் ஒன்றை அன்றைக்கு கொண்டு வர முடிந்தது.அந்த இருபது அம்ச திட்டம் மக்களுக்கு எவ்வாறெல்லாம் நன்மை கொடுத்தது என்று இன்று மக்கள் நன்றாக உணர்வார்கள்.

அவருடைய காலகட்டத்திலே தான் கிழக்கு பாக்கிஸ்தான் முஜ்பூர் ரகுமான் அங்கு வெற்றிபெறுகிறார்.ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் யாகியாகான் அதிபராக இருக்கிறார்.வெற்றி பெற்ற முஜுபூர் ரகுமானை பதவியேற்க தடைவிதிக்கிறார் யாகியாகான்.தலைமை அமைச்சராக இருந்த அண்ணை இந்திரா அவர்கள் இந்த சூழலை எல்லாம் பார்க்கிறார்.அப்போது அங்கு முஜ்பூர் ரகுமான் தனி நாடு அறிவிக்கிறார்.உடனே முதன் முதலாக அந்த தனிநாடை பங்களாதேஷ் என்ற ஒரு நாட்டை இந்த பூலோக பந்திலே உருவாக்கி காட்டிய இரும்பு மங்கை தான் அன்னை இந்திராகாந்தி அவர்கள்.

அவருடைய காலத்திலே ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். அது மன்னர் மானிய ஒழிப்பு ,அதை தொடர்ந்து பதினான்கு வங்கிகளை தேசியமயமாக்கிய ஒரு மிகப்பெரிய சாதனை .மன்னர் மானிய ஒழிப்பிற்கும் வங்கிகள் தேசியமயமாக்குவதற்கும், அவரின் கூடவே இருந்த பல்வேறு தலைவர்கள் அடிப்படை வாதிகளாக இருந்த சில தலைவர்கள் அதனை கடுமையாக எதிர்த்தார்கள்.ஆனால் அதையெல்லாம் கடந்து அந்த சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர் தான் அன்னை இந்திராகாந்தி அவர்கள்.

லால்பகதூர் சாஸ்திரிக்கு பிறகு பதவியேற்ற அன்னை இந்திராகாந்தி அவர்கள் தொடர்ந்து முறையாக நடைபெற்ற கட்சி தேர்தல்களிலே மொரார்ஜி தேசாய் அவர்கள் இவருக்கு எதிராய் நிற்கிறார்.ஆனால் தேசாய் அவர்கள் வெற்றிபெற முடியவில்லை.வெற்றிபெற்ற அன்னை இந்திரா அவர்கள் தலைமை அமைச்சரான பிறகு தன்னை யார் எதிர்த்து போட்டியிட்டாரோ அவரை தன்னுடைய அமைச்சரவையிலே நிதிஅமைச்சர் பதவியும் , துணைபிரதமர் பதவியும் கொடூந்து மிகப்பெருந்தன்மையோடு வழங்கி அன்றைக்கு நடந்து கொண்டவர் தான், அன்னை இந்திராகாந்தி அவர்கள்.

இன்றைக்கு கவர்னரை நியமித்து இங்கு ஆட்சி செய்கின்ற பினாமி அரசை முழுமையாக தன்னுடைய கட்டுபாட்டிலே கொண்டு வந்து எப்படியாவது தமிழ்நாட்டிலே கால் பதித்து விடமுடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன் இங்கே வந்திருக்கிற புரோகிதர் பன்வாரிலால் அவர்களும் சரி ,இவர்கள் ஏற்கனவே பல்வேறு கவர்னர்களை பல்வேறு இடங்களில் அமர்த்தியிருக்கிறார்கள்.அந்த வகையிலே தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஆர்எஸ்எஸ் காரரை மேகாலையா மாநி லத்திற்கு கவர்னராக அங்கு நியமித்தார்கள்.அவர் அங்கு ஒரு நல்ல மக்கள் பணியை அங்கு செய்தார்,அது என்னவென்றால் ராஸ்டரபதி பவன் என்று சொல்லக்கூடிய கவர்னர் தங்கும் இல்லத்திலே அதிகமாக பெண்கள் நடமாடுவதாக செய்தி வருகிறது,இது தான் இவர்களுடைய லட்சனம்.அது நிருபிக்கப்பட்டு அவர் பதவி இழந்த கதைதான் இன்றைக்கு பிஜேபியினுடைய கதை .

மக்களை அழைய விடுவதிலே இந்த மோடி அரசு முதலிடத்திலே இருந்துக் கொண்டிருக்கிறது.பணமதிப்பிழப்பு என்ற அறிவிப்பு எந்தவொறு முன்னேற்பாடுமில்லாமல் ரிசர்வ் வங்கியுனைடைய ஒப்புதலில்லாமல்,ரிசர்வ் வங்கியிலே தனக்கு எதிராக இருந்த ரகுராம் ராஜன் என்கிற வங்கி கவர்னரை விலக்கி வைத்துவிட்டு தனக்கு வேண்டியவர்களை உள்ளே வைத்துக்கொண்டு அந்த பணமதிப்பிழப்பு நடைபெற்றது.இந்த நடவடிக்கையால் நாட்டுமக்களுக்கும் ,அரசுக்கும் எந்த ஒரு பலனும் கிடையாது.இவர்கள் எதிர்பார்த்த கருப்பு பணத்தை அவர்களால் கைபற்றமுடியவில்லை.அவர்களுக்கு தெரியும் இந்த கருப்பு பணம் எங்கு இருக்கிறது என இந்த பிஜேபி ஆட்சிக்கு நன்றாக தெரியும்.

எல்லாவற்றையும் விட கொடுமையான விசயம் என்னவென்று சொன்னால் இன்றைக்கு கோட்சேவுக்கு கோவில் கட்டிக்கொண்டிருக்கிறான் அதை இவர்கள் வேடிக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.மிக சமீபத்திலே நான் அந்தமான் சென்று வந்தேன், அந்தமானிலே விமான நிலையத்திற்கு வீரசவர்கர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.அங்கு இருக்கும் செல்லுலார் சிறைக்கும் வீரசவர்கர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன் வீரசவர்கரின் இந்திய விடுதலை போராட்டத்தில் அவருடைய பங்கு என்ன? ஆங்கிலேயர்களிடம் நீங்கள் சொல்லும்படியெல்லாம் நான் நடக்கிறேன் என எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்தவரும், காந்தியை கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கின்ற சவர்கருக்கு அந்தமானிலே விமான நிலையத்திற்கு அவரின் பெயர். ஆக எல்லாற்றிலும் குழறுபடி குழறுபடி என்று இருக்கும் இவர்களை மாற்ற வேண்டுமென்று சொன்னால் இந்தியாவிலே நிச்சயமாக சொல்கிறேன் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு கை எடுத்து மேலே வந்தால் மட்டும் தான் இந்த நாட்டுமக்களை காப்பற்ற முடியும் என்ற நிலையை அத்தனை பேரும் உணர்ந்திருக்கிறார்கள்.

இதோ பக்கத்து மாநிலத்திலே ஆளுகிற சீத்தாரமையா அவர்கள் முடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் என்ற அருமையான சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலே கூட அந்த சட்டத்தை கொண்டு வரமுடியவில்லை .அப்படியொரு அருமையான சட்டத்தை கர்நாடகத்தில் காங்கிரஸுனுடைய ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.இதையெல்லாம் பார்க்கும் போது மிக விரைவிலே , இந்த மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்ற மோடி அரசிற்கு முடிவு கட்ட வேண்டும் என இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிற அன்னை இந்திராகாந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் சபதமேற்று உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன் என தனது உரையை என நிறைவு செய்தார்.

( அய்யாவின் பேச்சின் நடுநடுவிலும் முடிவிலும் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் ஒலித்த்து)


No comments:

Post a comment