அண்மையச்செய்திகள்

Sunday 26 November 2017

ரிக்க வண்டி ஓனரால் கடத்தப்பட்ட சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு சத்தியமங்கலம் காட்டில் பிணமாக மீட்பு!

ரிக்க வண்டி ஓனரால் கடத்தப்பட்ட சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு சத்தியமங்கலம் காட்டில் பிணமாக மீட்பு!
""""""""""""""""""""""""""""""""""
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சுரேஷ், கடந்த 20.10.2017 அன்று அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கு வரவில்லை என்று மகாலட்சுமி போர்வெல் வாகன உரிமையாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவனால் அடித்து இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

மேற்படி சுரேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன, இவர் பேரவை ஒன்றிய செயலாளர் ராமேஷ் என்பவரின் உடன் பிறந்த சகோதன் ஆவார். இவர் கடத்தி செல்லப்பட்ட நாள்முதல் காவல்நிலைய முற்றுகை, எஸ்.பி அலுவலத்தில் முறையீடு என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இன்று 24.11.2017 நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந் நிலையில் கடத்தி சென்ற ரிக்வண்டி உரிமையாளர் மீது ஏற்கனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான், அந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் மூன்று நபர்களை நேற்று முன்தினம் கைது செய்து விசாரிக்கப்பட்டதில், சுரேஷை கொலை செய்து சத்தியமங்கலம் காட்டில் வீசியதாக ஒத்துக்கொண்டுள்ளனர். அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை நேரில் சென்று பார்த்ததில், அங்கு கிடப்பது சுரேஷின் உடல்தான் என்பது உறுதியாகியுள்ளது.

நாளைக் காலை சுரேஷின் உறவினர்களை அழைத்து உடலை அடையாளம் காணவைப்பதாக சுரேஷின் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளது காவல்துறை.

இந்த தகவலை அறிந்த மாவட்ட செயலாளர் மணிமாறன் காவல்துறையை தொடர்பு கொண்டு விசாரித்ததில்.. கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது தெரிய வந்துள்ளது.

எனவே நாளை விசாரணைக்கு நாமக்கல் மாவட்ட தோழர்கள் சத்தியமங்கலம் வருவதால், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து உதவிட வேண்டும் என்று கேட்டுகொள்கிறது பேரவை தலைமைக் குழு.
____________________
தகவலுக்காக
பொதுச்செயலாளர்.
24.11.2017 இரவு 9.15.


No comments:

Post a Comment