அண்மையச்செய்திகள்

Thursday, 23 November 2017

உழைப்பவர் கோபம் உடுமலையில் மய்யம் கொள்ளட்டும்! அம்பேத்கர் பிறந்த மாதம் அதற்கு அடித்தளமிடட்டும்.. --- பொதுச்செயலாளர் ஆதித்தமிழர் பேரவை

தலித்துகளை வெளியேற்றுவதான் டிஜிட்டல் இந்தியா! ஸ்மார்ட் சிட்டியா?
""""""”"""""""""""""""""
நகரத்தைவிட்டு பூர்வகுடி மக்களை துரத்தியடிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுவோம்! பாடை கட்டுவோம்!
*********************
சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தலித் மக்களை 'ஆக்கிரமிப்பு அகற்றம்' என்ற பெயரில் சென்னையை விட்டு விரட்டியடிக்க மத்திய மாநில அரசுகள் சதி!
சென்னையை மட்டுமல்ல தமிழகப் பெருநகரங்களை தூய்மைப் படுத்துகிறோம், ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப் போகிறோம் என, அண்மைகாலமாக கோவை ஈரோடு போன்ற நகரின் மய்யப் பகுதிகளில் நெடுங்காலமாக வசித்துவரும் பூர்வகுடி தலித் மற்றும் இசுலாமிய சிறுபான்மை உழைக்கும் மக்களை, நீர்பிடிப்பு பகுதிகளில் குடியிருந்து வருவதாக மிரட்டல் விடுத்து அவர்களை நகரை விட்டு 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்தியடிக்க ஆயத்தமாகி வருகிறது, மத்திய மாநில அரசுகள்!
தூய்மை இந்தியா, ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க வேண்டும் என்றால்.. கட்டமைப்பு வசதிகளை வலுவாக்க வேண்டும், அழகிய நகரம் உருவெடுக்க காரணமான குடிசைவாசிகளுக்கு அடுக்குமனை குடியிருப்புகளை அமத்துத்தர வேண்டும், கழிப்பிடம், குடிநீர், சாலை போன்ற வசதிகளை பெருக்க வேண்டும்,
அதை விடுத்து, ஏற்கனவே வனங்களை நம்பி வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை வனப்பாதுகாப்பு என்ற பெயரில் வனங்களைவிட்டு துரத்தியடித்தது போல், கடலை நம்பி வாழ்ந்து வரும் மீனவ மக்களை கடல் பாதுகாப்பு என்று பெயரில், கடலோரப் பகுதிகளில் இருந்து துரத்துவது போல்.. நகரத்தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் பூர்வகுடி மக்களை, ஸ்மார் சிட்டி என்ற பெயரில் நகரை விட்டு வெளியேற்ற முயற்சிக்கும் பார்ப்பனிய சதிகளின் ஒன்றுதான் இது!
எப்போதும் இல்லாத அளவிற்கு மாநில உரிமைகளில் தலையிடுவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மிரட்டி பணியவைப்பது, எதிர்த்துக் கேட்பவர்களை அடக்குமுறை சட்டம் கொண்டு ஒடுக்குவது, ஜனநாயக போராட்டங்களை நடத்த விடாமல் தடுப்பது,
மாட்டின் பெயரால், நீட்டின் பெயரால், நோட்டின் பெயரால் மக்களின் நிம்மதியை குலைத்து எப்போதும் மக்களை பதட்ட நிலையிலேயே வைத்திருக்கும் மத்திய மோடி அரசையும், அதற்கு ஏற்றவாறு தலையாட்டும் தமிழக எடப்பாடி பழனிச்சாமி அரசையும் அகற்றாமல், நமது வாழ்விடங்களை காப்பாற்ற முடியாது.
உழைக்கும் மக்களால் உருவான தேசமிது.. உழைக்கும் மக்களுக்குதான் முதலிடம்..
குறுக்கு வழியில் அதிகாரத்தை பிடித்தவர்களின் குறுக்கெலும்பை முறிக்க கொதித்தெழுவோம்! உழைக்கும் மக்களாய்!
உழைப்பவர் கோபம் உடுமலையில் மய்யம் கொள்ளட்டும்!
அம்பேத்கர் பிறந்த மாதம் அதற்கு அடித்தளமிடட்டும்..
அழைக்கிறார் அய்யா அதியமான்.
ஆயத்தமாவோம்! ஆதித்தமிழர் நாம்!
தோழமையுடன்..
ஆ.நாகராசன்
ஆதித்தமிழர் பேரவை.
23.11.2017.

No comments:

Post a comment