அண்மையச்செய்திகள்

Tuesday 7 November 2017

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் மறைவிற்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் இரங்கல்

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார்.

ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
""""""""""""""""""""""""""""""""""""""""
தலைவர் அதியமான் இரங்கல்
****************************
1924 ஆம் ஆண்டு சூலை 30 கடலூர் சாத்துக்குடலில் பிறந்த தமிழ் பேராசிரியர் மா.நன்னன், 94 வது அகவையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

நான் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அவருடன் நெருங்கி பழகுவதற்கான நல்ல வாய்ப்புக் கிடத்தது, எல்லோரிடத்திலும் எளியமையாகவும் இயல்பாகவும் பழகும் சிறந்த பண்பாளர். இவர் கலந்து கொண்ட பல்வேறு கூட்ட நிகழ்வுகளில் நான் பங்கேற்ற நாட்கள் என்னால் மறக்க இயலாதவை.

இப்படி தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர் மா.நன்னன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருஞானசம்பந்தன் என்ற இயற்பெயர் கொண்ட மா.நன்னன் அவர்கள், தமிழ்க் கட்டுரை மற்றும் பாட நூல்கள் உள்ளிட்ட சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், திராவிட இயக்க உணர்வு பெற்றபின் தமிழிசைக்கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் பங்கேற்றவர் என்ற தனிப் பெருமையும் இவருக்குண்டு.

1942 ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். எழுத்து அறிவித்தலில் நன்னன் முறை என்ற புதிய முறையை உருவாக்கியவர். பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளை பெற்ற இவர்.

தொலைக்காட்சிகளில் பல்வேறு தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் மெட்ராஸ் பிரஸிடென்சி கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கலைஞர் கூட்டிய உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் முதன்மையான இடம் வகித்தவர்.

இப்படி தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வடிவங்களில் தொண்டாற்றிய தமிழறிஞர் மா.நன்னன் அவர்களது இழப்பு தமிழகத்திற்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு.

தமிழறிஞர் மா.நன்னன் அவர்களுக்கு ஆதித்தமிழர் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இவண்
இரா.அதியமான்,
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை.
7.11.2017 கோவை.

No comments:

Post a Comment