அண்மையச்செய்திகள்

Tuesday, 21 November 2017

பூனைக்கு மணி கட்டுவது யார்? பொதுச்செயலாளர் கேள்வி

பூனைக்கு மணி கட்டுவது யார்?
"""""""""""""""""""""""""""""""""""
நேற்று 20.11.2017 கோவையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில்
உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, 30 பெண்கள் உட்பட 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட இறுதியில் ஆட்சியரிடம் மனுக்கொடுக்க சென்ற போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறைக்கும் பேரவையினருக்கும் போதல்! ஏற்பட்டது.
மோதலுக்கு காரணம்
""""""""""""""""""""""""""""""""
அண்மையில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே கருகிச் செத்தது. அந்த சம்பவத்தின் எதிரொலியாக கந்து வட்டிக் கயவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டிய காவல்துறை முன்னெச்சரிக்கை என்ற பெயரில் மனுக் கொடுக்கவரும் அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களைத்தான் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது,
சோதனை செய்வதாக காவல்துறை, படுத்தும் பாட்டிற்கு அளவே இல்லாமல் போய்விட்டது, அதுவும் தலித் மக்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை, அவர்களை நடத்தும் விதமே தனி!
அப்படித்தான் நேற்று மனுக்கொடுக்க சென்ற போது, ஒரு பெண் எஸ்.ஐ, லஞ்சப் பணத்தில் ஊதி உடல்பெறுத்த ஆணவத்திலும், போலீஸ் என்ற திமிரிலும் அவரது உடல்பலத்தை கொண்டு உடல் மெலிந்த அப்பாவி அருந்ததியர் பெண்களை கீழே தள்ளிவிட்டு தனது அதிகாரத்திமிரை காட்டியது.
ஏன் இப்படி அராஜகமாக நடந்து கொள்கிறீர்கள் என்று பேரவையினர் கேட்டதற்கு ஆவேசம் கொண்ட எஸ்.ஐ பேரவையினரை மிரட்டியது, அந்த எஸ்.ஐ க்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஒரு ஆண் இன்ஸ்பெக்டரும் தனது காக்கிப்படையிடன் வந்து அந்த பெண் எஸ்.ஐ முன்பாக ஹீரோயிசத்தைக் காட்டினார், இந்த பூச்சாண்டிதனத்தை பார்த்தா நீலப்படை அஞ்சப் போகுது!
ஆட்சியர் அலுவலமே அதிரும் வகையில் தனது போர்க் குணத்தைக்காட்டி காவல் துறையிடம் மோதியது, அதைப் பார்த்த பத்திரிக்கை, மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் சூழ்ந்து கொண்டு ஒளிப்பதிவு செய்தவுடன் ஹீரோயிசம் காட்டிய காக்கிகள் எங்கு ஓடி ஒளிந்தார்கள் என்றே தெரியவில்லை!
மடியில் கணமில்லை!
"'''''''""""""""""""""""""""""""""""
பட்டா வங்கித் தருவதாக ஏமாற்றி பணம் புடுங்கும் ஆசாமிகள் பலர் அங்கு திரிவதாலுல், பஞ்சமி நிலங்களை மீட்பதாக சொல்லி கொண்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் பணம் பன்னும் தலித் விரோதிகளும் அங்கு அலைவதாலும், அவர்களைப் போலவே நம்மையும் பார்த்து விட்டதாக அங்கு ஒரு சில செய்தியாளர்கள் கூறினர்.
ஒரு சில அயோக்கியர்கள் செய்யும் தவறு உண்மையான மக்கள் இயக்கங்களை பாதிக்கின்ற நிலையை அந்த சூழலில் உணர முடிந்தது.
ஊடகமும், காவல்துறையும் பாஜக பரிவாரங்களுக்கு கை ஆளாக மாறி விட்டது.
""""""''''"'""'""'"""""""""""""""""""
மக்கள் பிரச்சினைகளை முன்னிருத்தும் போராட்ட செய்திகளை ஒரு மூலையில் கூட போடுவதற்கு தயாராகாத ஊடகங்கள், அயோத்தியில் இராமர் கோவில் கட்ட கோவையில் கொடுத்தால் அந்த செய்தியை பெரிதாக்குகிறது, காவித்துண்டுடன் வருவது யாராக இருந்தாலும் காவல்துறை சாலாம் போடுகிறது.
இந்த பார்ப்பனிய சூழ்ச்சிகளை யார் அம்பலப்படுத்துவது,
ஆளுனரின் அத்துமீறிய ஆய்வு, கோவையில் இருந்து புறப்படும் சேரன் விரைவுத் தொடர்வண்டியில் ஜக்கியின் மதப்பரப்புரை என பாஜக.வின் பார்ப்பனியத் திணிப்பு கோவையை குஜராத்தாக மாற்றி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
நீலமும், கருப்பும், சிகப்பும் கரம் கோர்க்க வேண்டிய கட்டாயத் தேவை தற்போது கோவையில் ஏற்பட்டுள்ளது.
அந்த பார்ப்பனிய பூனைகளுக்கு மணி கட்ட யார்? முன் வருவார்கள் என்று பார்ப்போம்!
அனுபவப் பகிர்வு.
________________________
-நாகராசன்
ஆதித்தமிழர் பேரவை.
21.11.2017.


No comments:

Post a comment