அண்மையச்செய்திகள்

Tuesday, 7 November 2017

கோவில்பட்டியில் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியில் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர்  அலுவலகம் முற்றுகை 6-11-17
*************
பத்திரிகையாளர் சந்திப்பு
நகர மற்றும் கிராம புறங்களில் பல தலைமுறைகளாக வாழும் அருந்ததிய மக்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்ட வழங்கப்படவில்லை இதனால் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வாழும் அவளை நிலை இருக்கிறது. இது குறித்து மக்கள் கடந்த 21-1-2017 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளனர் . இருந்தும் ஆட்சியர் அந்த மனுவின் மீதான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுவரை . மேலும் எட்டயபுரத்தில் அருகிலுள்ள துளக்கரைப்பட்டி கிராமத்தில் தமிழக அரசினால் அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைகள் இன்னும் அளவீடு செய்யாமல் அப்படி இருக்கிறது .இதனால் அருந்ததிய வாழ்வாதார பிரச்சனையில் அரசு  தலையிட்டு உரி நடவடிக்கை எடுத்து எம்மக்களின் வாழ்த்தரத்தை காக்க வேண்டுமென்று நாங்கள் தற்போது மனு கொடுத்திருக்கிறோம். இனியும் அரசு எம்மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் விரைவில் பெரும்திரளான இம்மக்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக குடியேறும் போராட்டத்தை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இம்முற்றுகை போராட்டத்தில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a comment