அண்மையச்செய்திகள்

Monday, 4 December 2017

தோழமை இயக்கங்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் அழைப்பு

தோழமை இயக்கங்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் அழைப்பு
சாதி ஒழிப்பு பணியில்
அய்யா அதியமான் அவர்களின் வழியில்
தன்னை முழுமையாக அர்ப்பணித்து
வள்ளியூர் பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடத்தப்பட்ட அனைத்து போராட்டங்களிலும் தன்னை முதன்மை நபராக அடையாளபடுத்திக்கொண்டு மக்கள் பணி செய்த மகத்தான போராளி மகாராசன்

2012 ம் ஆண்டு வள்ளியூர் பகுதியில் கொடி பெயர் பலகை ஏற்ற வந்த அய்யா அதியமான் அவர்களுக்கு மிகுந்த எழுச்சியோடு பொதுமக்கள் வரவேற்பு தந்தனர்
அந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களில் முக்கிய நபராக இருந்து களப்பணி செய்த போராளி மகாராசன்
அய்யா அதியமான் அவர்கள் உருவம் பதித்த பணியனைதான் அதிக நேரங்களில் பயன்படுத்துவார்
கல்லூரியில் படிக்கும் போது மாணவர்களை ஒருங்கினைக்கும் பணியை செய்து வந்த போராளி மகாராசன்
சுடுகாடு வசதி கேட்டு பாடைகட்டி நடத்திய போராட்டத்தில் பல எதிர்ப்புகளை கடந்து மக்களை திரட்டிய போராளி மகாராசன்
சுடுகாடு வசதி கேட்டு
வயதான பாட்டி மறைந்தவுடன் அவரது உடலை வைத்து சாலையில் மறியல் போராட்டம் நடத்திய போராளி மகாராசன் என தன்னால் முடிந்த அளவு சமூகபணியில் தனது பங்கை செலுத்திய போராளிதான் மகாராசன்
இப்படி மக்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்த நேரத்தில்
திடிரென்று ஒருநாள் இரவோடு இரவாக பேரவையின் பெயர்பலகையும் கொடியும் வெட்டி சாய்க்கப்பட்டது என்று தகவல் வருகிறது
சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது
அருகில் உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் கொடியையும் பெயர்பலகையையும் சேதப்படுத்தியவர்கள் என்று தெரிய வருகிறது
அவர்கள் மீது வழக்கு பதியபடுகிறது அன்றிலிருந்து பகை உணர்வும் சேர்ந்து வளருகிறது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படியே பல பிரச்சனைளை கடந்து
வள்ளியூர் பயணிக்கிறது
கொடியையும் பெயர்பலகையையும் சேதப்படுத்திய கயவர்கள் ஒருநாள் மகாராசனால் தாக்கப்படுகிறார்கள்
சக்கிலியன் கையில் அடிபட்டுவிட்டோமே என்ற எண்ணம் அவர்களை கொலை செய்ய தூண்டுகிறது
திசம்பர் 18 அன்று இரவு 8 மணியளவில் மாகாராசன் படுகொலை செய்யப்படுகிறான்
தனது உயிரை விட அதிகமாக நேசித்த பேரவை கொடியை சேதப்படுத்திய கயவர்களை கம்பத்தில் கட்டி வைத்து மகாராசன் அடிக்கிறான் அடித்ததிற்காக கொலை செய்யபடுகிறான்
தனது உரிமைக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் போராட்ட பாதையில் உயிர்தியாகம் செய்த மாவீரன் மகாராசன் நினைவுநாளான திசம்பர் - 18 அன்று அவரது நினைவிடத்தில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு வீரவணக்கம் செலுத்துவோம் என்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கிறேன்
போராளியின் தியாகத்தை போற்றுகின்ற விதத்தில்
வீரவணக்கம் செலுத்த அனைத்து தோழமை இயக்க தோழர்களும் வாருங்கள்
நன்றி
தோழமையுடன்
கு.கி.கலைகண்ணன்
மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை கிழக்கு மாவட்டம்

No comments:

Post a comment