அண்மையச்செய்திகள்

Thursday, 2 November 2017

ஆதித்தமிழர் பேரவை நெல்லையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் 1-11-2017


கந்துவட்டி தடைச்சட்டம்,வன்கொடுமை தடுப்புச்சட்டம்,கையால் மலம் அள்ளும் தடைச்சட்டம்,
என பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எந்த ஒரு சட்டத்தையும் முறையாக நடைமுறைபடுத்தாமல் தமிழக அரசும் ,காவல் துறையும் அலட்சியம் காட்டி வருவதை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி நாங்கள் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம்.


பத்திரிகையாளர் சந்திப்பு காணொளி 
போராட்ட காணொளி

இச்சட்டங்களை முறையாக நடைமுறை படுத்தாமல் தமிழக அரசும், காவல் துறையும் அலட்சியம் காட்டி வருவதால் இக்கொடுமைகளால் பாதிக்கப்படும் பல அப்பாவி மக்கள் செய்வதறியாது தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் அவல நிலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசும் காவல் துறையும் இனிமேலாவது விரைவாக செயல்பட்டு கந்துவட்டி தடைச்சட்டம்,
வன்கொடுமை தடுப்புச்சட்டம்,
கையால் மலம் அள்ளும் தடைச்சட்டம் போன்ற மக்களை காக்கும் சட்டங்களை முறையாக கண்காணித்து நடைமுறை படுத்திட வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது

கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுவதற்கு நாங்கள் கொடுத்த அழைப்பை ஏற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்த
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மனித நேய மக்கள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி
சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா
தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
தமிழர் விடுதலை களம்
வனவேங்கைகள் பேரவை
மக்கள் போராட்ட குழு
அனைத்து தோழர்களுக்கும்
ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தந்து பெரும் திரளாக கலந்து கொண்ட அய்யா அதியமான் அவர்களின் தளபதிகள் பேரவை தோழர்கள் அனைவருக்கும்
ஆதித்தமிழர்பேரவை
நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்
மகிழ்ச்சி


கு.கி.கலைகண்ணன்
மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை கிழக்கு மாவட்டம்

No comments:

Post a comment