அண்மையச்செய்திகள்

Monday 4 December 2017

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையினர் மறியல் போராட்டம்.! -- பதட்டம் போலிஸ் குவிப்பு

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையினர் மறியல் போராட்டம்.! -- பதட்டம் போலிஸ் குவிப்பு
""""'""""''"'"'"'"""'"'"'""''''''"""""'''"'"""""""""""'
இன்று (04-12-2017) காலை10 மணியளவில் மதுரை பேரவையின் கிளையான டாக்டர் கபீர்நகர் அருந்ததியர் மக்களும்,
பேரவையின் முன்னனி பொறுப்பாளும் ஒருங்கிணைத்து #ஆதித்தமிழர் பேரவை சார்பில் நீண்ட கோரிக்கையான பட்டா கேட்டு மதுரை - சிவகெங்கை சாலை.விக்ரம் மருத்துவமனை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த காவல்துறையினரும்.வருவாய் துறையினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கீழ்க்கண்ட மனுவினை பெற்றுக்கொண்டு ஓரிரு நாளில் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
-------------------------------------------
அனுப்புநர்;
ஆதித்தமிழர் பேரவை மற்றும் அருந்ததியர் பொதுமக்கள்.
டாக்டர் கபீர் நகர்.
மதுரை 20
பெறுநர் :
உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்.
கிழக்கு தாலுகா.
மதுரை.
அய்யா வணக்கம்,
மதுரை மாநகர் 29 வது வார்டாகிய டாக்டர் கபீர்நகரில் அருந்ததியின மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 200 குடும்பங்களுக்கும் மேல் குடியிருந்து வருகின்றோம்.
எங்கள் பகுதியில் போதிய இடவசதியும் இல்லை.அடிப்படை வசதிகளும் கிடையாது.
இந்நிலையில்
கபீர் நகர் ஒட்டிய பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதை வீடடற்ற எம்மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டுமென்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு பலமுறை மனுக்கொடுத்துள்ளோம். இது தொடர்பாக மதுரை வடக்கு தாலுகா வாக இருந்தபோது வடக்கு வட்டாட்சியர் அவர்கள் நேரில் வந்து எங்களுக்கு பட்டா வழங்குவதாக ஒப்புதல் (வாய்வழி) ஒப்புதல் அழித்துவிட்டு சென்றார்கள்.
தற்போது கிழக்கு தாலுகா வாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்டு இது வரை எந்தவொரு வருவாய் துறை அதிகாரிகளும் எங்களுக்கு பட்டா வழங்குவதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக பலமுறை கிழக்கு வட்டாட்சியருக்கும்.மாவட்ட ஆட்சியருக்கும் மனு கொடுத்தும் யாரும் எங்களது மனுவிற்கு பதில் அளிக்கவில்லை.
ஆதலால், நாங்கள் அளிக்கும் இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வீடற்ற எம்மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பாகவும்,ஆதித்தமிழர் பேரவை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
கிராம மக்கள். மற்றும்
ஆதித்தமிழர் பேரவை.
டாக்டர் கபீர்நகர்.மதுரை.
04-12-2017.
---------------------------------------
தற்போதைய வாக்குறுதியை ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், வாக்குறுதியை வருவாய்த் துறையினர் மீறினால் மீண்டும் நாங்கள் மிகப்பெரிய சாலை மறியலும், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, பேரவைத் தோழர்களும், பொதுமக்களும் அதிகாரிகளுகளிடம் தெரிவித்தனர்கள்.
இதில் பேரவையின் கிளைப்பொறுப்பாளர்களும்.உறுப்பினர்களும்,
மாநில துணைப் பொதுச்செயலாளர் கார்த்திக்.
தூய்மைத் தொழிலாளர் பேரவை மாநிலச் செயலாளர் பெரு.தலித்ராஜா.
வடக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் அன்புச்செழியன்.
வடக்கு புறநகர் மாவட்டச் செயலாளர் பா.ஆதவன்.ஆகியோர்களும் மற்றும் அருந்ததியர் பொது மக்களும்,மாவட்டப் பொறுப்பாளர்களும்
இம்மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
----------------------------------------
ஆதித்தமிழர் பேரவை.
மதுரை.
04-12-2017




No comments:

Post a Comment