அண்மையச்செய்திகள்

Saturday, 16 September 2017

தலைவர் அதியமான் அறிவுறுத்தலின் பேரில்.. 15.9.2017 அன்று கலந்து கொண்ட நிகழ்வுகள் -- பொதுச்செயலாளர்.

தலைவர் அதியமான் அறிவுறுத்தலின் பேரில்.. 15.9.2017 அன்று கலந்து கொண்ட நிகழ்வுகள்
""""""""""""""""""""""""""""""""""""""
காலை 11 மணி
*****************
திருப்பூர் வடக்கு மாவட்டம் ஊத்துக்குளி தேனீஸ்வரன்பாளையம் சமூகக்கூடத்தில் போராளி தளபதி.அய்யப்பன் அவர்களின் 7 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்வு நடைபெற்றது, இந் நிகழ்வை முன்னிறுத்தி
*நீட் எதிர்ப்பு-சமூகநீதி மீட்பு கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக ஊத்துக்குளி ஆர்.எஸ் ல் வைக்கப்பட்டிருந்த அய்யப்பன் உருவப் படத்தின் முன்பு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கருத்தரங்க நிகழ்வை பரமேசுவரன் தலைமை தாங்கினார், துரையரசன் வரவேற்றார், மாவட்டதலைவர் சோழன், கொ.ப.செயலாளர் சக்திவேல், தெற்கு மாவட்ட செயலாளர் அர்சுணன் உள்ளிட்டோர் உரையற்றினார், நிகழ்வில் நீட் தேர்வு குறித்தும் சமூகநீதி குறித்தும் பொதுச்செயலாளர் நாகராசன் கருத்துரையாற்றினார். முடிவில் குருமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்வில் இளைஞரணி செயலாளர் சின்னச்சாமி, உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாலை 4 மணி
****************
கரூரில் நீட்தேர்வை எதிர்த்தும் மாணவி அனிதாவிற்கு நீதி கோரி ரயில்மறியலில் ஈடுபட்டு திருச்சி மத்தியசிறையில் 8 நாட்கள் சிறைபடுத்தப்பட்டு நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் முல்லையரசு, சண்முகம், சக்திவேல், வீரபொன்னுசாமி, வெண்மணி, பெரியவர்.பழனிச்சாமி, பிரகாசு, செந்தில்குமார், துரைச்சாமி, ஜெயபிரகாசு ஆகிய 11 தோழர்களை வரவேற்று கரூர் லைட்அவுஸ் சந்திப்பில் உள்ள பெரியார்சிலை முன்பு எழுச்சிகர நிகழ்வு நடைபெற்றது, இந்த ஏற்பாட்டினை தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தோழர் தனபால் செய்திருந்தார், மேலும் பிணையில் வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும், தோழர் தனபாலும், பேரவை தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் ஆகியோர் கவனித்தனர், வரவேற்பு நிகழ்வில், புரட்சிபாரதம் கட்சி வீரமணி, இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தலித்பாண்டியன், த.பெ.தி.க தமிழ்க்கவி, இந்திய கணசங்கம் கட்சி கவிமுரசு.கண்ணன், வி.சி.க, குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வழக்கறிஞர் முருகேசன், சாமானிய மக்கள் கட்சி குணசேகரன், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஆசிரியர் இராமசாமி,வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன், தமிழர் பண்பாட்டுப் பேரவை ஆசிரியர் காமராசு, பகுஜன் சமாஜ் கட்சி மதுரைவீரன், உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர், இந் நிகழவில் பேரவை பொதுச்செயலாளர் நகராசன், பங்கேற்று தோழர்களுக்கு ஆடை அணிவித்து தலைவர் அதியமான் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் அர்சுணன் உடன் இருந்தார், நிகழ்வில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தோழர்களை உற்சாகப் படுத்தினர். சிறை சென்ற தோழர்கள் இன்று முதல் 15 நாட்களுக்கு கரூர் காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுதிட உள்ளனர்.
வழக்கும் சிறையும் பேரவைக்கு புதிதல்ல.. தமிழக உரிமைகளை மீட்கவும், சமூகநீதியை காக்கவும் தலைவர் அதியமான் ஆணைக்கு இணங்க தொய்வில்லாமல் தொடர்ந்து போராடுவோம், என்று சிறை சென்ற தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சபதமேற்றனர்.
____________________
தகவல்
பொதுச்செயலாளர்.
15.9.2017
No comments:

Post a comment