அண்மையச்செய்திகள்

Tuesday 12 September 2017

நீட்தேர்வை எதிர்த்து மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகோரி.. ரயில் மறியலில் ஈடுபட்ட கரூர் மாவட்ட பேரவையினர் சிறையிலடைப்பு.

#ஆதித்தமிழர்_பேரவையினர்_சிறையிலடைப்பு....

Fir no.. 774/17 u/s 143, 188 ir nw 7(1) a cla act.

நீட்தேர்வை எதிர்த்து மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகோரி..
ரயில் மறியலில் ஈடுபட்ட கரூர் மாவட்ட பேரவையினர் சிறையிலடைப்பு.
""""""""""""""""""""""" ”"""""""”"""""”"""
மாணவி அணிதாவின் உயிரைப் பறித்த மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்களிக்க வேண்டும் என்றும், கல்வியை மாநில அதிகாரப் பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், வழக்கறிஞர்கள், மாணவ மாணவியர் போராடி வரும் நிலையில், நீட்தேர்வு அறிவிப்பு வந்த நாள்முதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை பல்வேறு போராட்டங்களை தனித்தும், கூட்டியக்கங்களுடனும் போராடிவருகிறது, அதனடிப்படையில் நேற்று 7.9.2017 மதுரையில் பேரவையின் இளைஞரணி துணைச் செயலாளர் செல்வம் அவர்களும், இன்று கரூர் மாவட்ட செயலாளர் முல்லைஅரசு உள்ளிட்ட 11 தோழர்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வருகிறது,

தமிழக உரிமைகளை மீட்டெடுக்க நீதி கேட்டு போராடும் தோழர்களை வழக்குப் போட்டு சிறையில் அடைத்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் ஆளும் அதிமுக அரசு இதற்கு விரைவில் பதில் சொல்லியாக வேண்டும்.

வாக்களித்த மக்களை வதைக்கும் எடப்பாடி அரசிற்கு சாவுமணி அடிக்க தமிழக மக்களே! அணிதிரள்வீர்.
--அண்ணன் ஆ.நாகராசன்





No comments:

Post a Comment