அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் தலைமை அறிவிப்பு

ஆதித்தமிழர் பேரவை
தலைமை அறிவிப்பு
"""""""""""""""""""""""""""""""""
1) ஆகத்து 20 மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாளில் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் காலை 10 மணிக்கு பச்சேரி நெற்கட்டான் செவ்வயல்பாளைய நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்துகிறார். எனவே அய்யாவுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்த தோழர்கள், தாங்கள் வரும் வாகனங்களுடன், காலை 9.30 மணிக்குள்ளாக சங்கரன்கோயில் வந்து சேரவும்…
2) பிற்பகல் 3 மணிக்கு அரசின் கவன ஈர்ப்பு #கோரிக்கை_முழக்க_ஆர்ப்பாட்டம் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நடைபெறும்…
3) மாலை 5 மணிக்கு மாமன்னர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் நிறுவனர் தலைமையில் வீரவணக்கம் செலுத்தி நிகழ்வுகள் நிறைவுறும்.
தோழர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து நமது நிகழ்வுக்கு வலுசேர்க்க வேண்டும் என்று தலைமை கேட்டுக்கொள்கிறது.
நன்றி!!!
____________________
தோழமையுடன்
ஆ.நாகராசன்.
பொதுச் செயலாளர்
ஆதித்தமிழர்பேரவை
19.8.2017

No comments:

Post a comment