அண்மையச்செய்திகள்

Wednesday, 13 September 2017

நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில் நாளை ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.. நிறுவனர் அய்யா அதியமான் வேண்டுகோள்.

நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில் நாளை ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்..
நிறுவனர் அய்யா அதியமான் வேண்டுகோள்.
****************************
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்களிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை மாணவர்களும், கட்சிகளும் இயக்கங்களும் வலுவாக முன்னெடுத்து வருகின்ற நிலையில் மத்திய அரசோ அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய மாநில அரசோ இன்று வரை மவுனமே சாதித்து வருகின்றது.
நீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்பாட்டம், முற்றுகை, ரயில்மறியல் என பேரவை சார்பில் பவேறு போராட்டங்களை முன்னெடுத்தோம், அப்படி போராடிய தோழர்களை மதுரையிலும், கரூரிலும் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை 13.9.2017 புதனன்று தமிழகம் முழுவதும் தி.மு.க ஒருங்கிணைக்கும் ஆர்பாட்டத்தில் பேரவைத் தோழர்கள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
12.9.2017

No comments:

Post a comment