அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

இன்று தலைநகரத்தில் நடைபெறும் முரசொலி பவள விழா பொதுக்கூட்டதில் ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் பங்கேற்கிறார்

இன்று தலைநகரத்தில் நடைபெறும் முரசொலி பவள விழா பொதுக்கூட்டதில் ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் பங்கேற்கிறார்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;
முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். நிறைவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.
LikeShow more reactions
Comment

No comments:

Post a comment