அண்மையச்செய்திகள்

Tuesday, 12 September 2017

நீட் தேர்வை எதிர்த்து மாணவருடன் இணைந்து போராடிய மதுரை செல்வம் சிறையிலடைப்பு.

நீட் தேர்வை எதிர்த்து மாணவருடன் இணைந்து போராடிய மதுரை செல்வம் சிறையிலடைப்பு.
""""""""""""""""""""""""""""""""""
நீட் தேர்வை எதிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், நேற்று மதுரை தமுக்கம் மைதானம் முன்பு கூடிய மாணவர் போராட்டத்தில் பங்கெடுத்த பேரவையின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் மதுரை செல்வத்தின் மகள் உள்ளிட்ட 7 மாணவியர் மீது காவல்துறை தடியடி செய்து குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது, இதில் செல்வத்தின் மகளை மட்டும் வயது குறைவு என்ற காரணத்தினால் இன்று காலையில் விடுதலை செய்தது, ஆனால் 6 மாணவியரை மேலூர் மகளிர் சிறையிலும், எஞ்சிய 50 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் மதுரை செல்வத்தையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளது.
நீட்டுக்கு எதிரான போராட்டங்களை தமிழகம் முழவதும் பேரவை முன்னெடுத்து வரும் நிலையில், தானும் தன் மகளும் நீட்டுக்கு எதிராக போராடி கைதாகி இருக்கும் கொள்கை உறுதிக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் சார்பில் தலைமைக் குழு தெரிவித்துக் கொள்கிறது.
No comments:

Post a comment