அண்மையச்செய்திகள்

Wednesday, 13 September 2017

ஆதித்தமிழர் தோழர்களே தெரிந்து கொள்வோம் தூய்மை பணியாளர்களுக்காக நேற்று நெல்லையில் நடந்த கூட்டம் மனித கழிவகற்றுவோர் மறுவாழ்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இந்த கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த குழுவில் ஆதித்தமிழர் பேரவையும் இடம் பெற்றுள்ளது

ஆதித்தமிழர் #தோழர்களே
தெரிந்து கொள்வோம்
தூய்மை பணியாளர்களுக்காக நேற்று நெல்லையில் நடந்த கூட்டம் மனித கழிவகற்றுவோர் மறுவாழ்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இந்த கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த குழுவில் ஆதித்தமிழர் பேரவையும் இடம் பெற்றுள்ளது
கூட்டத்தின் செய்திகள்  - https://atptamilnadu.blogspot.in/2017/09/2013.html

-------
 தூய்மை பணியாளர்களுக்காக
நேற்று நெல்லையில் நடந்த கூட்டம் மனித கழிவகற்றுவோர் மறுவாழ்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
இந்த கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த குழுவில்

மாவட்ட ஆட்சி தலைவர்
சட்டமன்ற உறுப்பினர்கள் (SC)
மாநகராட்சி ஆணையாளர்
காவல் கண்காணிப்பாளர்
பஞ்சாயத்து இயக்குநர்
மாநகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர்
இரயில்வே நிர்வாக சுகாதார ஆய்வாளர்
மாவட்ட ஆட்சியர் கணக்கு பிரிவு உதவியாளர்
மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்
மாவட்ட அளவிலான திட்ட இயக்குநர் உதவி திட்ட இயக்குநர் பஞ்சாயத்து
உதவி திட்ட இயக்குநர் டவுண் பஞ்சாயத்து
மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் என இத்தனை உறுப்பினர்களை கொண்ட குழுவில்,,,

துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட
துப்புரவு பணியாளர்களுக்காக தொடர்ந்து இயக்கம் நடத்தும் எந்த ஒரு அமைப்பு தோழர்களுக்கும் இடம் இல்லை
விதிவிலக்காக நெல்லை மாவட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நான் மட்டும் இருக்கிறேன் துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரத்திற்காக நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டங்களால் இந்த குழுவில் உறுப்பினராக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது....

இந்த குழுவின் பணிகள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

கையால் மலம் அள்ளும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 ன் படி
துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவரது குழந்தைகள் அனைவருக்கும்
கல்வி வேலைவாய்ப்பு
NEET உட்பட அனைத்து நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகள் மருத்துவ பரிசோதனை
உடற்கல்வி தொழிற்கல்வி வேலைவாய்ப்பு கழிப்பிட வசதி
மாலை நேர கல்வி
கல்வி உதவித்தொகைகள்
இலவச கல்வி ஆணைகளை பின்பற்றுதல்
குடியிருப்புளை மேம்படுத்துதல்
விதிமுறைகளை மீறி துப்புரவு பணியாளர்கள் பணியில் அமர்த்தபடுகிறார்களா என்பதை கண்காணிப்பது அப்படி பணி செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது துப்புரவுப்பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுவது துப்புரவுப்பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணபலன்கள் பிடித்தம் சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பது மறுவாழ்விற்காக ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் என்பதை கண்காணிப்பது என பல பணிகளை உள்ளடக்கியது இந்த கண்காணிப்பு குழு

இந்த குழுவில் நமக்கான பணி என்ன?

அரசு அதிகாரிகள் நடத்தும் கூட்டம் கண்துடைப்பு நாடகம்
நம்மை சமாதான படுத்தும் கூட்டம்
அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது விசத்தை சாப்பிடுவதற்கு சமம் என்று தோழர்கள் என்னலாம்
தவறில்லை

போராட்டம் மட்டுமே தீர்வை தரும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளவன் நான்
எனக்கும் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை
தோழர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்...

நாம் துப்புரவு பணியாளர்களுக்காக எவ்வளவு பெரிய போராட்டம் செய்தாலும்
நாட்கணக்கில் வேலை நிறுத்தம் செய்தாலும் உண்ணா விரதம் இருந்தாலும் நம்முடைய கோரிக்கை என்ன என்பதை அதிகாரிகளுக்கும் அரசுக்கும் தெரியபடுத்தாமல் போராட்டம் நடத்துவதில்லை
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எதற்காக போராட்டம் நடத்துகிறோம் நேரில் சென்று எதற்காக மனு கொடுக்கிறோம்
மனு கொடுக்காமல் போராட்டம் மட்டும் நடத்திய ஏதாவது ஒரு போராட்டம் தோழர்களால் சொல்ல முடியுமா முடியாது
எப்படி பார்த்தாலும் நாம் அதிகாரிகளை சந்தித்துதான் ஆக வேண்டும் வேறு வழியும் கிடையாது

இப்படிபட்ட சூழ்நிலையில் கண்காணிப்பு குழுவில் உறுப்பினர்களாக நாம் இருக்கும் போது நம்முடைய கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யபடுகிறது
நம்முடைய கேள்விகளுக்கு அனைத்து அதிகாரிகளும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் மேலே குறிப்பிட்ட பணிகளை நாம் நேரடியாக கண்காணிக்க முடியும் நாம் இருக்கின்ற இடத்தில் நமக்கு இருக்கும் குறைந்த பட்ச அதிகாரத்தை எப்படி நம் மக்களுக்கு பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும் அதுவே புத்திசாலிதனம் அதுமட்டுமல்லாமல் இந்த குழுவில் உள்ள அனைவரும் அரசுக்கு ஆதரவானவர்கள் அவர்கள் அரசுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டார்கள் இந்த இடத்தில் நமக்கான உரிமையை நாம் எப்படி நிலை நிறுத்துவது நமக்கான குரல் ஒங்கி ஒளித்தால் மட்டுமே உரிமைகள் நிலை நாட்டபடும்
நமது உறவுகளுக்காக அவர்களின் பிரதிநிதியாக பேச எனக்கு வாய்ப்பு கிடைத்த இடமாகதான் நான் பார்க்கிறேன்

கையால் மலம் அள்ளும் மக்கள் தமிழகத்தில் இல்லை என்று இந்த குழுக்கள் கொடுத்த அறிக்கையை வைத்துதான் தமிழகத்தில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இல்லை என்று தமிழக அரசு அறிவித்தது
இப்படி பொய்யான அறிக்கை வெளியிட
காரணம் அந்த குழுவில் நமக்காக குரல் கொடுக்க ஒருவர் கூட கிடையாது
குறிப்பாக துப்புரவு பணியாளர் ஒருவர் கூட கிடையாது
அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது இரண்டு தோழர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருந்திருந்தால் நம்மை மீறி பொய்யான அறிக்கைகளை அரசு அறிவிக்க முடியாது கூட்டத்தில் எடுக்கபடும் தவறான முடிவுகளை நாம் உரிமையோடு தடுக்க முடியும்

மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு வழங்கும் உரிமைகளை முறையாக பெறுவதற்கு போதுமான விழிப்புணர்வு இல்லை அவர்களுக்காக போராடுகின்ற இயக்க தோழர்களுக்கும் சில வழிமுறைகள் தெரியவில்லை பின்பு எப்படி துப்புரவு பணியாளர்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அவர்களுக்கு வந்து சேரும்
இது போன்ற கண்காணிப்பு குழுவில் உறுப்பினர்களாக இருந்தால் குறைந்தபட்சமாவது சில தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் அதன் மூலம் நம் மக்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய முடியும்
என்பதை உணர்ந்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள கையால் மலம் அள்ளுவோர் மறுவாழ்வு கண்காணிப்பு குழுவில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் தங்களை உறுப்பினர்களாக இனைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்தால் நல்லது
மேலும் வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழுவிலும் உறுப்பினர்களாக இனைய முயற்சி எடுக்கவும்

இதுவும் நம் மக்களுக்கான போராட்டமே
போராட்டம் தொடரட்டும்

மகிழ்ச்சி

கு.கி.கலைக்கண்ணன்
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர்பேரவை
கையால் மலம் அள்ளுவோர் மறுவாழ்வு கண்காணிப்பு குழு உறுப்பினர்.

No comments:

Post a comment