அண்மையச்செய்திகள்

Wednesday 6 September 2017

கோவில்பட்டியில் தலைமை தபால் அலுவலகத்திற்கு ஆதித்தமிழர் பேரவையினர் பூட்டு

கோவில்பட்டியில் தலைமை தபால் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற 21 பேர் கைது
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் காரணம் என்றும், அவர்களை கண்டித்தும், நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆதித்தமிழர் பேரவையினர் அந்த அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளர் நம்பிராஜன் தலைமையில் எட்டயபுரம் சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியவாறு தலைமை தபால் அலுலவகத்தின் இரு வாயில்களுக்குள் சென்று அலுவலத்தினை பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர், தபால் அலுவலக ஊழியர்களும் தடுத்தால் இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தவிர போராட்டங்காரர்கள் உள்ளே சென்று விடமால் இருக்கும் வகையில் இரு வாசல்களும் பூட்டப்பட்டன. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு, மாவட்ட தலைவர் முத்துகுமார், மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன் உள்பட 21பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் தபால் அலுவலகம் பூட்டப்பட்டதால் உள்ளே இருந்த மக்களும், ஊழியர்களும் பதற்றமடைந்தனர்.







No comments:

Post a Comment