அண்மையச்செய்திகள்

Wednesday, 13 September 2017

கையால் மலம் அள்ளும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 ன் படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மனித கழிவகற்றுவோர் மறுவாழ்வு மற்றும் கண்கானிப்பு குழு கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

தூய்மைப்பணியாளர்களை பாதுகாக்கும் இயக்கம் ஆதித்தமிழர் பேரவை

கையால் மலம் அள்ளும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 ன் படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மனித கழிவகற்றுவோர் மறுவாழ்வு மற்றும் கண்கானிப்பு குழு கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

கையால் மலம் அள்ளும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 ன் படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மனித கழிவகற்றுவோர் மறுவாழ்வு மற்றும் கண்கானிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது...
நெல்லை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி முதல் பஞ்சாயத்து வரை கையால் மலம் அள்ளும் அவலம் இருக்கும் இடங்கள் துப்புரவு பணியாளர்களின் அவலங்கள் என அனைத்தையும் ஆதாரம் மற்றும் புகைப்படங்களோடு எடுத்து காட்டினேன்

ஐந்து நிமிடத்தில் முடிய வேண்டிய கூட்டம் கிட்டதட்ட ஒன்றறை மணி நேரம் நடைபெற்றது
மூக்கூடல் வள்ளியூர் குருவிகுளம் சங்கரன் கோவில் சிவகிரி மானூர் என பல இடங்களில் இருக்கும் கழிப்பிடங்களில் கழிவுகளை அகற்றும் அவலங்களை புகைப்படங்கள்
ஆள் உயர கழிவுநீர் ஒடைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்யும் புகைபடங்கள்
பாதாள சாக்கடைகளில் பாதுகாப்பில்லாமல் பணி செய்யும் புகைப்படங்கள் என ஆதாரத்துடன் எடுத்து கூறியதால் அனைத்தும் மறுக்காமல் ஏற்கப்பட்டது

மறுவாழ்வு சட்டப்படி துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் அவரது குழந்தைகள் அனைவருக்கும்
கல்வி வேலைவாய்ப்பு
நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகள் மருத்துவ பரிசோதனை
உடற்கல்வி தொழிற்கல்வி வேலைவாய்பு கழிப்பிட வசதி மாலை நேர கல்வி
கல்வி உதவித்தொகைகள்
இலவச கல்வி ஆணைகளை பின்பற்றுதல் என அனைத்து நலன்களையும் நடைமுறைப்படுத்த ஒரு வாரத்திற்குள் தனிக்குழு அமைக்கப்படும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் துப்புரவுப்பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் துப்புரவுப்பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணபலன்கள் பிடித்தம் சரியாக பின்பற்றப்பட வேண்டும்
வண்ணார்பேட்டையில் பிளிசிங் பவுடர் போட்டதில் கையில் பலத்த காயம் பட்டு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் முருகன் என்பவருக்கு அரசு உதவிகள் அனைத்தும் உடனடியாக செய்துதர பட வேண்டும் மறுவாழ்விற்காக ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் துப்புரவுப் பணியாளர்கள் நடைமுறையில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பேசி முடிவெடுக்ப்பட்டது...

கூட்டத்தில்....

மாவட்ட ஆட்சி தலைவர்
மாநகராட்சி ஆணையாளர்
காவல் கண்காணிப்பாளர்
பஞ்சாயத்து இயக்குநர்
மாநகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர்
இரயில்வே நிர்வாக சுகாதார ஆய்வாளர்
மாவட்ட ஆட்சியர் கணக்கு பிரிவு உதவியாளர்
மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்
மாவட்ட அளவிலான திட்ட இயக்குநர் உதவி திட்ட இயக்குநர் பஞ்சாயத்து
உதவி திட்ட இயக்குநர் டவுண் பஞ்சாயத்து
மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் என பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் பல்வேறு புள்ளி விபரங்கள் ஆதாரங்களோடு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நான் எனது கருத்தை பதிவு செய்தேன்....
வேறுயாரும் கருத்து பதிவு செய்யாத போது நான் மட்டுமே கருத்தை பதிவு செய்கிறேன் என்றால் அதுதான் இரத்த உணர்வு
மாற்றத்தை எதிர்பார்ப்போம்

மாவட்ட துணை தலைவர்
இலக்கியன்
மாவட்ட துணை செயலாளர்
கி.கா.விடியல் அரசு
பாளை ஒன்றிய செயலாளர்
ந.தமிழ்குட்டி ஆதித்தமிழன்
தோழர்கள் கலந்து கொண்டனர்

மகிழ்ச்சி

கு.கி.கலைகண்ணன்
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர்பேரவை
கையால் மலம் அள்ளுவோர் மறுவாழ்வு கண்காணிப்பு குழு உறுப்பினர்No comments:

Post a comment