அண்மையச்செய்திகள்

Wednesday 6 September 2017

நீட் தேர்வு மட்டுமல்ல இன்று தமிழ்நாட்டு உரிமைகளில் பல்வேறு தளங்களிலும் தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிற பயங்கரவாதத்திர்ற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும் --- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ( முரசொலி பவளவிழா மேடையில் 5-9-17)

வெறும் நீட் தேர்வு மட்டுமல்ல இன்று தமிழ்நாட்டு உரிமைகளில் பல்வேறு தளங்களிலும் தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிற பயங்கரவாதத்திர்ற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும் ---
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ( முரசொலி பவளவிழா மேடையில் 5-9-17)

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வான முரசொலி பவள விழாவில் எனக்கு வாய்ப்பளித்த செயல்தலைவர் அவர்களுக்கும் முரசொலி அறக்கட்டளைக்கும் அருந்ததியர் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நண்றினை உரித்தாக்கி கொள்கிறேன்

முரசொலி பவள விழாவை பற்றி பேச வேண்டுமென்றால் நாள் முழுவதும் போதாது , ஆனால் நான் அதிகமில்லாமல் ஒரே ஒரு செய்தியை மட்டும் உங்களுக்குச் சொல்லி விட்டு விடை பெறலாம் என்றிருக்கிறேன்.

முரசொலியில் அண்ணன் மாறன் அவர்கள் மாநில சுயாட்சியை குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி ,அதனை தொகுத்து "மாநில சுயாட்சி" என்கிற மிக அருமையான நூலை  இந்தியாவிலேயே யாருமே எளிதிராத ஒரு நூலை நமக்கு எழுதி வழங்கி சென்றிருக்கிறார்கள் .அந்த மாநில சுயாட்சி நூலிலே ஐந்து துறைகளை தவிர அணைத்து துறைகளும் மாநிலத்திற்கான உரிமையாக வழங்க பட வேண்டும்.
இராணுவம் , வெளியுறவு , மாநிலங்களுக்கிடையே தொடர்பு என்ற வகையிலே இருக்கவேண்டுமே தவிர, அனைத்து துறைகளிலும் ஆதிக்க மனப்பான்மையோடு இன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிற இந்த மைய அரசு இன்று ஒரு ஒற்றை கலாச்சாரத்தை பல்வேறு தேசிய இனங்களுக்கிடையே திணிக்க முற்பட்டு வருவதினால் அதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய சூழலாக இன்றைக்கு மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிற இந்த முரசொலி பவள விழா அமைதல் வேண்டும் .

இன்றைக்கு நீட் தேர்வினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற சொன்னால் அவர் மட்டுமல்ல சமூக நீதிக்காக இந்த தமிழ்நாட்டு தளத்திலே அருந்ததியர் சமுதாயத்திலும் மூன்று பேர் சமூக நீதிக்காக தங்களை தீயிட்டு கொளுத்தி மாண்டிருக்கிறார்கள்,அவர்கள்  நீலவேந்தனும் , இராணியும் , மகேசுவரனும் இவர்களில் இறுதியாக உயிர் துறந்தவரான மகேசுவரனின் இறப்பிற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்தலைவர் இரங்கல் செய்தி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார், அதில் அருந்ததியர் சமுதாயத்தினர் யாரும் இனி தங்கள் உரிமைகளுக்காக தற்கொலை செய்ய வேண்டிய தேவையில்லை , விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாறும் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் தைரியமாக இருங்கள் என்று குரல் கொடுத்த தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு தலைவர் மகேசுவரனுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள் என்றால் அது செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் மட்டுமே !

பல்வேறு தளங்களிலே மொழியிலும் , பண்பாட்டிலும் என அனைத்து தளங்களிலும் ஒரு மிக பெரிய தாக்குதல்களை இன்றைக்கு பயங்கரவாதிகள் தொடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தான் நான் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியும் இப்படி பல தளங்களிலே நமக்கு தாக்குதல் தொடுத்து கொண்டிருக்கிறே அந்த பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியம் இருக்கிறது வெறும் நீட் தேர்வு மட்டுமல்ல பல்வேறு தளங்களிலும் போராட வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது இருக்கிறது என்று சொல்லி இந்த வாய்ப்பை வழங்கிய செயல்தலைவர் அவர்களுக்கும் முரசொலி அறக்கட்டளைக்கும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றினை தெரிவித்து நிறைவு செய்கிறேன் என்று தனது உரையை முடித்தார்.





No comments:

Post a Comment