அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

ஆகத்து.20

ஆகத்து.20
""""""""""""""""
நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து
*காலை 9.00 மணிக்கு* நெற்கட்டான் செவ்வயல்பாளையத்தை நோக்கி தலைவர் அதியமான் தலைமையில் தொடங்கிய பயணம்.
காலை 11 மணிக்கு மாமன்னர் நினைவிடத்தில் நீலச்சட்டை படையுடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது, எப்போதும் இல்லாத அளவிற்கு தலைவரின் வீரவணக்க உரையில் ஆவேசமும் கோபமும் அதிகமாகவே தென்பட்டது, கடலூர் மாவட்டம் திட்டக்குடி தருமக்குடிகாடு சிவக்குமாரை படுகொலை செய்த விசிக ரவுடிகளின் கொலைவெறியாட்டத்தை இதுவரை கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கும் திருமாவின் அருந்ததியர் மீதான வெறுப்பே அதற்கு காரணம்.
*பிற்பகல் 12 மணி*
வீரவணக்க நிகழ்வு முடிந்து திரும்பும் வழியில் மாமன்னருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களை எதிரில் சந்திக்க நேர்ந்த போது, அய்யா அதியமானின் கரம்பற்றி மரியாதை செய்தார் ஓ.பி.எஸ். அய்யா அதியமான் உள்ளப்பூர்வமாக ஒண்டிவீரன் நினைவிடத்திற்கு வருகைதந்தமைக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டு விடைபெற்றார்.
*மாலை 4.00 மணி*
மாமன்னர் மணிமண்டபப் பணிகளை முழுமை படுத்த வலியுறுத்தி பாளைத்திடலில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற மக்கள்திரள் ஆர்ப்பாட்டதில் பங்கேற்று நிறைவுப்பேருரை ஆற்றிய அய்யா அவர்கள் மாமன்னர் மணிமண்டபப் பணிகளை முழுமைபடுத்த வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு அருந்ததியர் மக்கள் ஆற்றவேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகளை உணர்த்தி பேசினார், ஆதிபராசக்திக்கும், திருப்பதிக்கும் ஆண்டுக்கு ஒருமுறை திட்டமிட்டு குடும்பத்துடன் தனி வாகனம் பிடித்தி சென்றுவரும் நீங்கள் அடுத்த ஆண்டு ஒண்டிவீரன் நினைவிடத்திற்கும், ஒவ்வொறு குடும்பமும் தனித்தனி வாகனம் பிடித்து வந்து லட்சக்கணக்கில் திரண்டால் மட்டுமே அரசின் கவனம் நம்மீது திரும்பும், என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
*மாலை.7.00 மணி*
மாமன்னர் மணிமண்டபத்தில் நீலச்சட்டை தொடர்கள் சூழ வீரவணக்கம் செலுத்தி நிகழ்வை நிறைவு செய்தார். முன்னதாக மணிமண்டம் அருகில் பேரவையின் நீலச்செங்கொடியை ஏற்றிவைத்தார்.
*இரவு.9.30 மணி*
தலைவர் அதியமான் அவர்களின் தொண்டார் படை தளபதியும், தன்குடும்பத்தையே பேரவையில் ஈடுபடுத்திக் கொண்ட தூத்துக்குடி குரும்பூர் இளம் தோழர் நாகராசன் அவர்கள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மறைந்தார், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற பேரவை நிறுவனர் அய்யா அவர்கள், நாகராசன் படத்திற்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தியும், அவரை இழந்து வாடும், பெற்றோருக்கும், அண்ணன் களுக்கும், உறவினர்களுக்கும், தனது ஆறுதலை தெரிவித்து, பின்னர், அங்கு கூடியிருந்த இளம் சிறார், பெற்றோர் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
*இரவு 12.மணி*
11.30 மணியளவில் குரும்பூரில் இருந்து நெல்லைக்கு திரும்பிய நிறுவனர் அவர்கள் அதன் பிறகு இரவு உணவை முடித்திவிட்டு, அருந்ததிஅரசு, கலைக்கண்ணன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் தனது பாரட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் 21 ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு கோவை வந்து சேர்ந்தார். உடன் பொதுச்செயலார்.
____________________
நிகழ்வு சுருக்க பகிர்வு
பொதுச்செயலாளர்
21.8.2017
Comment

No comments:

Post a comment