அண்மையச்செய்திகள்

Wednesday, 6 September 2017

அருந்ததியர் தாக்குதல் வன்கொடுமை பேரவை தோழர்களின் முயற்சியால் வன்கொடுமை பதிவுசெய்யப்பட்டது

கடந்த 03-08-17அன்று சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், கொல்லதெரு அருந்ததியர் பகுதியை சார்ந்த ஆறுமுகம் மற்றும் அவருடைய மனைவி குந்தியம்மாள் இருவரும் கடைக்கு சென்று வீடு திரும்பும் போது நமது தெருவை ஒட்டி நாடார் சமூகத்தார் இருக்கிறார்கள் ஒரு சின்ன குழந்தை ஓடி கீழே விழுந்துவிட்டது அதை ஆறுமுகம் அந்த குழந்தையை தூக்க சென்ற போது நீ தான் தள்ளிவிட்டாய் என்று ஆறுமுகத்தை சாதியின் பெயரை சொல்லி திட்டி தாக்கியுள்ளார்.அதை தடுக்கவந்த அவருடைய மனைவி,மகள் அனைவரையும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நமது பேரவை தோழர் துரை.பெருமாள் அவர்களுக்கு தகவல் கிடைத்ததின் பெயரில் துரை.மாதேசு ஒன்றிய செயலாளர், சக்திவேல்,ஜெயபால் பேரவை அழுத்தம் கொடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(1)(r),3(1)(s),3(2)(va),IPC294(b),323,354கீழ் வழக்கு பதியப்பட்டது.
தகவலுக்காக
துரை.மாதேசு
சட்டக்கல்லூரி மாணவர்,
ஒன்றிய செயலாளர்,
காடையாம்பட்டி.
சேலம் மாவட்டம்.

No comments:

Post a comment