அண்மையச்செய்திகள்

Friday, 1 December 2017

வரும் முன் தடுப்போம்! -- பொதுச்செயலாளர்

வரும் முன் தடுப்போம்!
""""''"'"'''''''''''"""""""""'''''"""''"'''''
கோவை முழுவதும் இந்து முன்னணி, போன்ற அமைப்புகள், கிருத்துவ இசுலாமியர்களுக்கு எதிராக மசூதி, தேவ ஆலயங்களை சேதப்படுத்தி அதன் மூலம் மதக்கலவரத்தை உருவாக்க திட்டமிட்டிருப்பது வெளிப்படையாகி வருகிறது.

தற்போது அன்னூர் பகுதியில் உள்ள கிருத்துவ தேவ ஆலயம் ஒன்றை சேதபடுத்தி, அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை வரை சென்று
ஆர்.டி.ஓ விசாணையில் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சமூக விரோத செயல்கள் மூலம், மதக் கலவரங்களை மூட்டுவதற்கு கவுண்டர் நாயக்கர் போன்ற இடை நிலை சமூகங்களைச் சேர்ந்த வசதிபடைத்த முக்கிய பிரமுகர்களை தலைமை தாங்க வைத்து, ஒடுக்கப்பட்ட சமூகத்து அப்பாவி இளைஞர்களை பகடைக் காய்களாக்கி கிருத்துவ இசுலாமியர்களுக்கு எதிரான குரோதத்தைக் வளர்த்து, அதன் மூலம் கலவரத்தை அறுவடை செய்ய முற்படுகின்றனர். இதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் மறுப்பதற்கு இல்லை.

அபாயகரமான இச்செயல்களை தடுத்து நிறுத்திட ஆவண செய்ய வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தலைவர் அய்யா அதியமான் அவர்களை கிருத்துவ பாதிரியார்கள் நேற்று (29.11.2017) பேரவை தலைமை அலுவலகமான ஆதித்தமிழன் அரங்கத்தில் சந்தித்து முறையிட்டனர்.

அவர்கள் முறையிட்ட செய்திகளை கேட்டபோது அவை அனைத்தும், பேரதிர்ச்சியை ஊட்டுவத்காக இருந்தது. கோவையை கலவர பூமியாக ஆக்க, ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின் பேரில் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிசத், போன்ற அமைப்புகளுக்கு வேலைத்திட்டம் வழங்கப்படிருப்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.

இதற்கு சில அப்பாவி இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மது, கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை இலவசமாகக் கொடுத்து அந்த இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி, கிருத்துவ ஆலயங்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, மத அடையாளங்களை சிதைத்து, அங்கிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் செல்வதற்கான பயிற்சிகளைக் கொடுத்து செய்து முடித்துள்ளனர்.

ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போதும், கடந்த ஆண்டு நடந்தேறிய சசிக்குமார் இறுதி ஊர்வலத்தின் போதும் நடந்த திருட்டு கொள்ளைச் சம்பவங்கள் கூட இதற்கான சான்றாக இருக்கிறது.

கஞ்சாவை கொடுத்து இளைஞர்களை சீரழித்து, கலவரத்தை மூட்ட நினைப்பவர்கள், மெதுவாக ஆனால் வழுவாக காய்களை நகர்த்தும் போது. அதைத் தடுத்து நிறுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்தி நடக்க இருக்கும் பேராபத்தை தடுக்க கிருத்துவர்களும், இசுலாமியர்களும், ஒன்றிணைந்து, அம்பேத்கர் பெரியார், தலித் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கை கோர்க்க ஆக்கபூர்வமான செயல்களில் இறங்க உள்ளபூர்வமான ஒருங்கிணைப்பை உருவாக்க முன் வரவேண்டும். அதற்கான முயற்சியை ஆதித்தமிழர் பேரவை கோவையில் முன்னெடுக்க உள்ளது.

வரும் முன் தடுப்போம்!
வளமான மண்ணை காப்போம்!

தோழமையுடன்,
ஆ.நாகராசன்
ஆதித்தமிழர் பேரவை.
30.11.2017.No comments:

Post a comment